நெகிரி ஜெம்புல் கம்போங் கெடிஸ் இந்து மயான மண்டப நிர்மாணிப்பு பணிக்கு அமைச்சர் சிவகுமார் 38,600 வெள்ளி நிதியுதவி!

கோலாலம்பூர் நவ 2-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள கம்போங் கெடிஸ் இந்து மயான மண்டப நிர்மாணிப்பு பணிக்கு மனித வள அமைச்சர் வ. சிவகுமார் நேற்று 38,600 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்.

கம்போங் கெடிஸ் கிராம மேம்பாட்டு குழு மற்றும் இந்து மயான பராமரிப்பு குழுவும் இணைந்து இதுவரை இந்த மயானத்தை பராமரித்து வந்துள்ளது.

இதன் வழி கம்பொங் கெடிஸ் கிராமத்தில் வசிக்கும் 150 இந்திய குடும்பங்களும் பயனடைந்து வந்துள்ளனர்.

கெடிஸ் இந்து மயானத்தில் புதிய மண்டபம் கட்டும் பணிக்கு உதவும் படி அமைச்சர் சிவகுமாரிடம் கோரிக்கையை முன் வைத்தோம்.

எங்கள் கோரிக்கை மிகவும் பயனுள்ளதாக இருந்ததால் அமைச்சர் சிவகுமார் பெரிய மனதுடன் 38,600 வெள்ளியை அங்கீகரித்து உதவி புரிந்தது மிகவும் பாராட்டுக்குரியது என்று கம்போங் கெடிஸ் கிராம மேம்பாட்டு குழு தலைவர் முருகன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles