

கோலாலம்பூர் நவ 2-
சொக்சோ சமூக நல
பாதுகாப்பு என்பது மலேசியாவில் வேலை செய்யும் போது தொழிலாளர்களுக்கு ஒரு முக்கியமான பாதுகாப்பை பிரதிபலிக்கிறது.
அந்த அடிப்படையில் அனைவருக்கும் சமூக நீதி என்ற வகையில், வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களுக்கு சொக்சோ பங்களிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார்.
இந்தோனேசியா, வங்காளதேசம், நேப்பாளம், பாகிஸ்தான், இந்தியா, மியான்மர், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உயர் தூதரக அதிகாரிகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள்
மத்தியில் சொக்சோ சமூக நல பாதுகாப்பு ஒப்பந்தம் நேற்று பறிமாறிக் கொள்ளப்பட்டது.
அனைத்து பங்குதாரர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன், மலேசியாவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்புப் பாதுகாப்பை திறம்பட செயல்படுத்த முடியும் என்று நம்புகிறேன் என மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் உட்பட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

