
ஆலயங்கள் பக்தர்கள் வழிபடுவதற்கு ஏற்ற ஆலயங்களாக மாற வேண்டும் என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தியுள்ளார்.
. நாட்டில் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. ஆனால், பக்தர்கள் குறைவான எண்ணிக்கையிலே ஆலய வழிபாட்டிற்கு வருகை தருகின்றனர்.
இதனால், ஆலய நிர்வாகங்கள் தங்களின் பராமரிப்பு செலவுகளை சமாளிக்க முடியாமல் போய்விடுகின்றது.
இதற்கு குறைவான பக்தர்கள் வருவதே காரணமாக இருந்ததால் ஆலயங்கள் பக்தர்கள் வழிபாட்டிற்கு ஏற்ற வகையில் அமைய வேண்டும் என்று பத்துகேவ்ஸ் SHENGA மண்டபத்தில் நடைபெற்ற JERAM அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் நிதி திரட்டும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது மனிதவள அமைச்சருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் இவ்வாறு தெரிவித்தார்.
எது எப்படி இருந்தாலும் நாம் நமது சமயத்தை விட்டுக்கொடுக்க முடியாது. அந்தவகையில் ஆலய கட்டுமானங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் ஜெராம் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் மண்டப கட்டுமான பணிக்கு முதற்கட்ட நிதியாக 50 ஆயிரம் வெள்ளி வழங்குகிறேன். அதன் பிறகு அடுத்த கட்ட நிதியை தன்னால் முடிந்த வரையில் வழங்கி உதவுவதாக பலத்த கைத்தட்டல்களுக்கு மத்தியில் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் HIGH MAAS குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ சாரா 1 லட்சம் வெள்ளியும் AGENSI PEKERJAAN RAKAN PRO நிறுவனத்தின் தலைவர் டத்தோஶ்ரீ XAVIVER NATHAN 1 லட்சம் வெள்ளியும் இதர பிரமுகர்கள் தங்களால் இயன்ற நிதியையும் வழங்கினர்.


