400 இந்திய குடும்பங்களுக்கு
பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர்
குமரேசன் உதவிக் கரம் நீட்டினார்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பினாங்கு பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் தனது தொகுதியில் உள்ள 400 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் குமரேசன் ஆறுமுகம் தனது தொகுதியில் உள்ள வசதி குறைந்த மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இவ்வாண்டும் 400 குடும்பங்களுக்கு அவர் உதவி புரிந்துள்ளார்.

தீபாவளி அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்வில் பினாங்கு மாநில கெஅடிலான் தலைவர் நூருல் இஸா அன்வார் இப்ராஹிம், பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஸி திவான், பினாங்கு மாநில கலை கலாச்சார இயக்கத்தின் தலைவர் பாலநம்பியார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles