எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால்
வாக்குகள் சிதறும்
ஜொகூர் சந்திரசேகரன் கணிப்பு

கடந்த ஆண்டு நடந்து முடிந்த மலாக்கா மற்றும் ஜோகூர் மாநில தேர்தல் தேசிய முன்னணிக்கு சாதகமாக அமைந்தது.

எதிர் கட்சிகள் பிரிந்து போட்டியிட்டதால் அது தேசிய முன்னணிக்கு சாதகமாக அமைந்தது.

வரும் 15ஆவது பொது தேர்தலில் தேசிய முன்னிக்கே சாதகமாக அமைய வாய்ப்புள்ளது என ஜோகூர் சந்திர சேகரன் ஆறுமுகம் கருத்து தெரிவித்தார்.

எதிர் கட்சியினரின் சரியான திட்டமின்மையும், ஒற்றுமையின்மை,முரண்பாடான கருத்தும் இப்படி பல காரணத்தால் தேசிய முன்னிக்கு சாதகமாக அமையலாம்.

மேலும் மூடா கட்சி பக்காத்தான் கூட்டணியில் இருக்கிறது ஆனால் அதன் தலைவர் அன்வார் மூடா பக்காத்தான் கூட்டணியில் இணைய வேண்டும் என்றால் பதிவு செய்ய வேண்டும் என்கிறார்.

அதே போன்று பினாங்கு மாநில துணை முதல்வர் பி.ராமசாமி psm கட்சி பக்காத்தான் கூட்டணியில் இணைத்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை பக்காத்தானின் உச்சமன்ற ஏற்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் அமோக வெற்றி பெறலாம் என்று கடந்த தேர்தலில் ஜொகூர் பெக்கோ சட்டமன்றத்திற்கு வாரிசான் சின்னத்தில் போட்டி இட்ட திரு சந்திர சேகரன் கூறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles