
ரவாங் முத்தியாராவில் 12 ஆண்டுகளுக்கு முன் எஸ்.பி. கேர் கிளினிக் தொடங்கப்பட்டு இன்று எஸ்.பி.கேர் குழுமமாக உருவெடுத்து அதன் அடுத்த கட்ட பயணமாக 5 மாடிகள் கொண்ட மெனாரா எஸ்.பி.கேர் கட்டிடம் திறப்பு விழா கண்டிருக்கிறது.
ரவாங் வட்டாரத்தில் தொடங்கி தனது மருத்துவ சேவையை புக்கிட் பெருந்தோங், அந்தார காபி, கிள்ளான், செரி கெம்பாங்கான், செலயாங், சுங்கை புலோ வட்டாரங்களில் தனது மருத்துவ சேவையை விரிவுபடுத்தியிருக்கிறது.
மலேசியாவில் மட்டும் அல்லாது சென்னையிலும் தனது கிளினிக்கை எஸ்.பி.கேர் குழுமம் வெற்றிகரமாக நடத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வளர்ச்சியின் தொடர்ச்சியாக இப்பொழுது ரவாங்கில் எஸ்.பி.கேர் குழுமத்திற்கென்று தனி கட்டிடமாக மெனாரா எஸ்.பி.கேர் திறக்கப்பட்டிருக்கிறது என்று எஸ்.பி.கேர் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஹெர்ரி தினேஷ் மகாலிங்கம் கூறினார்.
புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் இந்த எஸ்.பி.கேர் மெனாராவில் மக்களுக்கு தேவையான சிறந்த மருத்துவ சேவையை வழங்கிடும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் நிறைந்த மருத்துவ தளவாடங்களை உள்ளடிக்கியிருக்கிறது.
எஸ்.பி.கேர் குழுமத்தின் புது மைல் கல்லாக விழங்குகின்ற இந்த மெனாரா வரும் காலத்தில் புதுப் புது சிறப்பு அம்சங்களோடு எஸ்.பி.கேர். குழுமத்திற்கும் மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்று ஹெர்ரி தெரிவித்தார்.

