
கோலாலம்பூர் நவ 22
மனித வள அமைச்சு (KSM) ஆறு நிறுவனங்களை உள்ளடக்கிய வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீடு சிண்டிகேட் மீதான விசாரணையைத் தொடங்கும் என்று அமைச்சர் சிவகுமார் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய மனிதவள அமைச்சர் சிவக்குமார், கடந்த சில நாட்களாக மலேசியா கினியால் பரவலாகப் புகாரளிக்கப்பட்ட இந்த விவகாரம் குறித்து தனக்கும் தெரியும் என்றார்.
இது தொடர்பாக மனித வள அமைச்சு மூலம் முழு விசாரணை மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிடுவேன். அதே நேரத்தில், இந்த புகார் இன்னும் விசாரணையில் உள்ளது என்றார் அவர்.
சிண்டிகேட்டில் ஈடுபட்டுள்ள ஆறு நிறுவனங்களின் வெளிநாட்டுத் தொழிலாளர் கோட்டா இறக்குமதி விண்ணப்பம் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி எப்படி அங்கீகரிக்கப்பட்டது என்பது குறித்து Khoo Poay Tiong (Pakatan Harapan – Kota Melaka எழுப்பிய கேள்விக்கு சிவக்குமார் இவ்வாறு பதிலளித்தார்.

