

கோலாலம்பூர் நவ 22-
மனிதவள அமைச்சுக்கான
2024 பட்ஜெட் மசோதா
நேற்று நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பட்ஜெட் மசோதா விவாதத்தில் பங்கேற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மனித வள அமைச்சர் சிவகுமார் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் மூன்று இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் சிவகுமார் பதில் அளித்தார்.
மேலும் புறக்கணிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் பிரச்சினை, TVET – Tahfiz TVET பங்கேற்பை ஊக்குவித்தல், திறன் பயிற்சி (EV), செயல்படுத்துதல். குறைந்தபட்ச ஊதியக் கொள்கை, அத்துடன் பாதுகாப்பு சமூக ஆர்வலர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை முன் வைத்தனர்.
கொடுக்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் மனித வள அமைச்சர் சிவகுமார் மிகவும் நிதானமாக பதில் அளித்துஅனைவரின் பாராட்டையும் பெற்றார்.
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் விமர்சனங்களையும் அமைச்சு பெரிதும் வரவேற்கிறது
இது தொடர்பாக அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் சொன்னார்

