

சுபாங் ஜெயா, டிச 7-
தொழிலாளர்களை வெளி நாடுகளில் இருந்து வரவழைத்து, மலேசியா வந்தவுடன் அவர்களுக்கு வேலை கொடுக்காத முதலாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் எச்சரித்தார்.
இந்த முதலாளிகளுக்கு எதிராக மனித வள அமைச்சு உறுதியான நடவடிக்கை எடுக்கும் .இந்த முறைகேடு முதலாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க மனிதவளத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“நாட்டின் இமேஜைப் பாதுகாப்பது முக்கியம் என்பதால் இந்த விஷயத்தை நான் தீவிரமாகக் கருதுகிறேன் என்று நேற்று மலேசிய இந்தியர் உணவகங்கள் சங்கத்தின் 23 ஆம் ஆண்டு கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

