

புத்ரா ஜெயா, ஜன.2-
புத்ராஜெயாவில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் (PICC) இன்று முதன்மை தரவுத் தளம் (PADU) அமைப்பை இன்று அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
மடானி அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த PADU முதன்மை தரவு தளத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி ஆகியோர் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவ்வொரு அரசாங்க வசதியும் சரியான பெறுநரால் அனுபவிக்கப்படும் என்று PADU உத்தரவாதம் அளிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது உரையில் தெரிவித்தார்.
நாட்டின் டிஜிட்டல் உருமாற்ற அணுகுமுறைக்கு ஏற்ப முதன்மை தரவுத் தளம் (PADU) உருவாக்கப்பட்டுள்ளது.
PADU மூலம், அரசு உதவி மற்றும் மானியங்கள் விநியோகத்தில் ஏற்படும் ஒவ்வொரு கசிவையும் தவிர்க்க முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

