மைபிபிபி உறுப்பினர்களே! மீண்டும் எழுச்சி பாதைக்கு திரும்புங்கள்… டத்தோ லோகபாலா அறைகூவல்

சுபாங் பிப் 25-
மைபிபிபி கட்சி மீண்டும் எழுச்சி பாதைக்கு திரும்ப வேண்டும் என்றால் இன்றே களத்தில் இறங்குங்கள் என்று மைபிபிபி உறுப்பினர்களை அதன் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் நீதிமன்ற படிகளை ஏறி இறங்கினோம்.

பலமுறை ஆர்ஓஎஸ் அலுவலகத்தை நோக்கி படை எடுத்தோம்.

மைபிபிபி கட்சியை வழிநடத்தப்போவது யார் என்ற போராட்டத்தில் இறுதியாக வெற்றி பெற்றோம்.

எங்களுக்கு பக்கப் பலமாக இருந்த டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குருஸ் இன்று நம்மோடு இல்லை என்பது பெருத்த வேதனையாகும்.

கடந்த 1992,1996 ஆம் ஆண்டுகளில் மைபிபிபி கட்சி இதேபோன்ற நீதிமன்ற வழக்குங்களை எதிர் நோக்கியது.

அதில் இருந்து மீண்ட மைபிபிபி மிகவும் எழுச்சியோடு இயங்கியது.

ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்றோம்.

இப்போது மைபிபிபி கட்சி நம் பக்கம். எந்தவொரு நெருக்கடியும் இல்லை.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் மைபிபிபி கட்சி மீண்டும் புதிய எழுச்சி பாதைக்கு திரும்ப வேண்டும் என்றால் இப்போது அனைத்து தொகுதி தலைவர்களும் தீவிரமாக களத்தில் இறங்கி மக்களுக்கு சேவையாற்றும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

நமது மைபிபிபி உறுப்பினர்களுக்கு விடுமுறை காலம் முடிந்து விட்டது.
இனியும் ஓய்வு வேண்டாம்.

2007 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் ஒரு சக்தி வாய்ந்த கட்சியாக மைபிபிபி உருவாக அனைவரும் கடுமையான உழைக்கும் படி அவர் உத்தரவு பிறப்பித்தார்.

இன்று சுபாங் தேசிய கோல்ஃப் மண்டபத்தில் சிலாங்கூர் மாநில மைபிபிபி பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles