
சுபாங் பிப் 25-
மைபிபிபி கட்சியை அழிவதை அபாயத்தில் இருந்து காப்பாற்றியவர் டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குருஸ் என்று சிலாங்கூர் மாநில மைபிபிபி தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி தெரிவித்தார்.
பேராசை பிடித்தவர்களால் மைபிபிபி கட்சி பல பிரச்சனைகளை எதிர் நோக்கியது.
இதனால்
கடந்த ஐந்து ஆண்டுகளாக மைபிபிபி நடவடிக்கைகள் செயல் இழந்தது.
நெருக்கடியான காலகட்டத்தில் மைபிபிபி கட்சியை காப்பாற்றிய பெருமை டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குருஸ் அவர்களை சாரும்.
இன்று அவர் நம்மோடு இல்லை என்றாலும் அவரின் சேவையை மறக்க முடியாது என்று மைபிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டத்தோ மோகன் கந்தசாமி தெரிவித்தார்.
சுபாங் தேசிய கோல்ஃப் மண்டபத்தில் இன்று சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் பேராளர் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சிலாங்கூர் மாநில மைபிபிபி தொகுதி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அந்தாந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநில அரசு மக்களுக்கு ஏராளமான உதவிகளை வழங்கி வருகிறது.
இந்த உதவிகள் மைபிபிபி உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் வகையில் தொகுதி தலைவர்கள் களத்தில் இறங்க வேண்டும் என்றார் அவர்.
சிலாங்கூர் மாநில மைபிபிபி பேராளர் மாநாட்டை மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மைபிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ இளையப்பன், செயலாளர் டத்தோ இண்டர்ஜிட் சிங், மைபிபிபி இளைஞர் அணி தலைவர் சத்திய சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

