கட்டட வாடகை குறைந்தால் உணவு விலைகள் குறையும்! டத்தோ லோகபாலா கூறுகிறார்

சுபாங் பிப் 25-
நாட்டில் உணவு விலைகள் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.

இதற்கு கட்டட வாடகை ஒரு காரணமாக இருக்கிறது.

உணவகங்களை நடத்தி கொண்டிருக்கும் கடைக்காரர்கள் அதிக அளவுக்கு கட்டட வாடகையை கட்ட வேண்டியுள்ளது.

கட்டட வாடகை குறைந்தால் கண்டிப்பாக உணவு விலைகள் குறைய வாய்ப்புள்ளது என்று மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

வர்த்தக கட்டட வாடகையை குறைக்க அரசாங்கம் முன் வர வேண்டும்.

அரசாங்கம் முயற்சி செய்தால் கண்டிப்பாக உணவு உட்பட பல பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னார்.

இன்று சுபாங் தேசிய கோல்ஃப் மண்டபத்தில் சிலாங்கூர் மாநில மைபிபிபி பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்த நிகழ்வில் மறைந்த டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குருஸ் தபால் தலையை வெளியிட்டு அதை அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles