

மலாக்கா, பிப் 26 பழ-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற
National MIFA Beyond Junior U14 football போட்டியில் ஜோகூர் குழுவாங் குழு சாம்பியன் கிண்ணத்தை தட்டிச் சென்றது.
மலாக்காவில் நடைபெற்ற இந்த போட்டியில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் ஜொகூர் குளுவாங் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பினாங்கு குழுவை வீழ்த்தியது.
பெண்கள் பிரிவில் கெடா கடாரம் 3 ஆவது இடத்தையும் மலாக்கா 4 ஆவது இடத்தையும் பிடித்ததன.
ஆண்கள் பிரிவில் பட்டர்வொர்த் ரேஞ்சர்ஸ் அணியினர் முதல் நிலையில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற சாம்பியன் அணிகளுக்கு தலா 1,500 வெள்ளியும் கிண்ணமும் வழங்கப்பட்டது.
மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி.பி. சண்முகம் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி சிறப்பித்தார்.
மீபா தலைவர் அன்பானந்தன், துணைத் டத்தோ பதி, ராஜன், போட்டி ஏற்பட்டுக் குழுத் தலைவர் ஸ்ரீசங்கர், ராமசந்திரன் உட்பட பலரும் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

