காஜாங்கில் சீனப் புத்தாண்டு உச்சரிப்பில் பள்ளி மாணவர்கள் – முதியோர்களுக்கு அன்பளிப்பு!

காஜாங் பிப் 26-
சீனப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று காஜாங் ஜாலான் புக்கிட்டில் நடைபெற்ற உபசரிப்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் Yb Shahredzuan Johan, காஜாங் கவுன்சிலர் பாலமுரளி, உலுலங்காட் மைபிபிபி தொகுதி தலைவர் டாக்டர் சுரேந்திரன், பாங்கி மைபிபிபி தொகுதி தலைவர் குமரவேல், காஜாங் கிராமத் தலைவர் தேன்மலர் ஆகியோர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அடுத்த மாதம் 11 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு பள்ளி தவணை காலம் தொடங்கும் வேளையில் இந்த நிகழ்வில் 20 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.மேலும் 20 முதியோர்களுக்கு அன்பளிப்பு மற்றும் ஆங் பாவ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles