
கோலாலம்பூர் பிப் 26-
நாட்டில் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளான முடித்திருத்தும் நிலையங்கள், நகைக் கடைகள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் கடைகளில் பணிபுரிய 7,500 அந்நிய தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாக்குறுதி அளித்தார்.
அப்போது மனிதவள அமைச்சராக இருந்த வி. சிவகுமார் எங்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் கிடைப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.
ஆனால் மனிதவள அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் எங்களின் கனவு எல்லாம் கலைந்து போனது. இப்போது அந்நிய தொழிலாளர்கள் கிடைக்காததால் நாங்கள் எல்லாம் பரிதவிக்கிறோம்.
எங்களுக்கு உதவி செய்யப் போவது யார். பிரதமரின் வாக்குறுதியும் என்னவானது என்று மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் இன்று கேள்வியை முன் வைத்தார்

