

போர்ட் டிக்சன், மார்ச் 1-
மலேசியாவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வரும் போர்ட் டிக்சனில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அலையென திரண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
காலையில் ஆகக முறைபடி சிறப்பு பூசைகள் நடைபெற்றன.
மகேஸ்வர பூசைக்கு பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.
புதிதாக திருப்பணி செய்யப்பட்டிருக்கும் ஆஞ்சநேயர் கோவில் இப்போது மிகவும் அழகான காட்சி அளிக்கிறது.

