

சுங்கை,மார்ச்01: சுங்கை சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மீண்டும் பள்ளிக்குப் போகலாம் உதவி திட்டம் வழங்கப்பட்ட நிலையில் சம்மதப்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவர்களோடு பள்ளி பிரதிநிதிகள் வராதது பெரும் வருத்தம் அளிப்பதாக சட்டமன்ற் உறுப்பினர் அ.சிவநேசன் வருத்தம் தெரிவித்தார்.
ஒவ்வொரு பள்ளியிலும் தேர்வு செய்யப்படும் பி40 மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை உட்பட பள்ளி உபகரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் நிலையில் அம்மாணவர்களோடு பள்ளியின் தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை சார்ந்தவர்கள் என பிரதிநிதிகளின் வருகையானது ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும் இது தொடர்பில் மாநில கல்வி இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் மேலும் அவர் கூறினார்.
மாநில அரசாங்கத்தின் இத்திட்டம் சரியான இலக்கை எட்டும் நிலையில் பள்ளி நிர்வாகம் காட்டும் அலட்சியம் வருத்தம் அளிப்பதாக கூறினார்.அதேவேளையில்,பள்ளி பிரதிநிதியாக கலந்து கொண்டவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.
சுமார் 160 ஆரம்பப்பள்ளி இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் இன்னும் அடையாளம் காணப்படாத பி40 மாணவர்கள் தங்களுக்கு பள்ளி உடமைகள் வேண்டுமானால் தனது சேவை மையத்தை அணுகுமாறும் கேட்டுக் கொண்டார்.
கல்வி சார்ந்த விடயங்களில் உதவிடவும் நன் பங்களிப்பு செய்யவும் தாம் எச்சூழலிலும் தயாராகவே இருப்பதாகவும் கூறினார்.
அதேவேளையில்,மாநில நிலையிலும் மாவட்ட நிலையிலும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் அதிகம் இருப்பதாகவும் அவற்றில் தன் வீட்டுப் பிள்ளைகள் அவற்றில் பங்கெடுத்து நன்மை அடைவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக தொழில்திறன் கல்வியில் பெற்றோர்களின் கவனம் திரும்ப வேண்டும் எனவும் அதிலும் சிறந்த எதிர்காலத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

