டிபிபி கெவின் மோராய்ஸ் கொலை வழக்கில் அறு பேருக்கு தூக்குத் தண்டனையை ஃபெடரல் நீதிமன்றம் நிலை நிறுத்தியது!

புத்ரா ஜெயா, மார்ச் 14-
டிபிபி டத்தோ கெவின் மோராய்சை கொலை செய்த வழக்கில் அறுவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மேல் முறையீட்டு நீதிதின்றம் இன்று நிலைநிறுத்தியது.

நீதிபதி டத்தோ ஹடாரியா சைட் இஸ்மாயில் தலைமையிலான
மூவரடங்கிய நீதிபதிகள் குழு இந்த தூக்குத் தண்டனையை மறு உறுதி படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் உடற்கூறு நிபுணர் கர்னல் டாக்டர் ஆர்.குணசேகரன் (வயது 61),
கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த எஸ்.ரவிச்சந்திரன் (வயது 53),
வேலை இல்லா நபர்களான ஆர்.டினேஸ்வரன் (வயது 32), ஏ.கே.டினேஷ்
குமார் (வயது 31), எம்.விஸ்வநாத் (வயது 34), எஸ். நிமலன் (வயது 31)
ஆகியோரே அந்த ஆறு குற்றவாளிகளாவர்.

டத்தோ கெவின் மோராய்சை கொலை செய்த வழக்கில் அந்த
அறுவருக்கும் உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலை மாதம் 10ஆம் தேதி
மரண தண்டனை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles