கம்போடியா, வியட்நாம், லாவோஸ் நாட்டு தலைவர்களுடன்அமைச்சர் கோபிந்த் சிங் கருத்து பரிமாற்றம்!

புத்ரா ஜெயா, மார்ச் 14-
கம்போடியா நாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பல நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

அறிவுப் பகிர்வு கொள்கை மற்றும் பரிந்துரை’ என்ற குழு அமர்வில் டிஜிட்டல் அரசாங்கத்தின் முயற்சிகளை நாம் பகிர்ந்து கொண்டதாக அவர் சொன்னார்.

குறிப்பாக டிஜிட்டல் மாற்றத்தை உறுதி செய்வதற்கான மலேசிய பிரதமரின் முழு அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினேன்.டிஜிட்டல் அமைச்சு கடந்த 2023 டிசம்பரில் நிறுவப்பட்டது.

இது புதுமை, செயல்திறன் மற்றும் மக்களுக்கு நன்மைகளை இயக்குவதில் டிஜிட்டல் நிகழ்ச்சி நிரலை வழிநடத்துகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்களும் டிஜிட்டல் மாற்றத்தை இயக்குவதில் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles