
கோலாலம்பூர் மார்ச் 14-
தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபார் சாடிக்குடன் என்னை தொடர்புபடுத்தி பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மாலிக் ஸ்டீரிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ அப்துல் மாலிக் இன்று எச்சரிக்கை விடுத்தார்.
ஜாஃபார் சாடிக்கிற்குத் தான் முதலாளியாக இருந்ததாகவும் மலேசியாவில் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் இருந்ததாகவும் தமிழ்நாட்டு தொலைக் காட்சி ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த பொய் செய்தி என் பெயருக்குக் ஏற்படுத்தியிருப்பதாகமாலிக் காணொளி ஒன்றின் வழி ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தார். நான் ஒரு வர்த்தகர். குறிப்பாக திரைப்பட துறை சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறேன். எனது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதற்காக சில தரப்பினர் மேற்கொண்ட நடவடிக்கையே இது ” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பில் தலைநகர் , டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருப்பதாகவும் இப்புகார் அறிக்கையை இந்திய தூதரகத்திடம் சமர்ப்பித்திருப்பதாகவும் மாலிக் குறிப்பிட்டார்.

