பினாங்கு இந்தியர் கால்பந்து சங்கத்தின் பயிற்றுனர்கள் சொக்சோ பாதுகாப்பு திட்டத்தில் இணைந்தனர்

பட்டர்வொர்த், மார்ச் 14-
சொந்த தொழில் அல்லது சொந்த வியாபாரம் செய்பவர்களுக்கு உதவும் வகையில் சொக்சோ சமூக நல பாதுகாப்பு நிறுவனம்
Socso skim keselamatan Pekerja sendiri திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் இந்த திட்டத்தில் பங்கெடுத்து பயன் அடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் பினாங்கு இந்தியர் கால்பந்து சங்கத்தைச் சேர்ந்த பத்து பயிற்றுநர்களில் ஐந்து பேர் இன்று தனியார் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் பங்கு பெற்றனர் என்று பினாங்கு இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

Puan Usha Davei Kanagobal – Pegawai Tadbir Perkeso மற்றும்
En Mohd Ripana Bin Abdul Samad – Pegawai Tadbir Perkeso ஆகியோர் இந்த தனியார் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் இடம் பெற்றுள்ள நன்மைகள் குறித்து பயிற்றுநர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

இந்த திட்டத்தில் 90 விழுக்காடு கட்டணத்தை அரசு ஏற்று கொள்ளும் வகையில் ஒருவருக்கு 23 வெள்ளி 30 காசை நாங்கள் செலுத்தினோம் என்று அவர் சொன்னார்.

பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து கிளப்புகளும் இந்த திட்டத்தில் பயன பெறும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles