தமிழகத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் தி.மு.க. எதிரி! பிரதமர் மோடி சாடல்…

நாகர்கோயில்:, மார்ச் 15-
தமிழகத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் தி.மு.க., எதிரி” என கன்னியாகுமரியில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மிகவும் கடுமையாக சாடினார்.

1990களில் கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காஷ்மீருக்கு சென்றேன். இப்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்துள்ளேன். நாட்டை துண்டாட நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர்; தமிழக மக்களும் வரும் தேர்தலில் தூக்கி எறிவார்கள்.

தமிழகத்தில் ‘இண்டியா’ கூட்டணி எடுபடாது; தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும்.. ‘இண்டியா’ கூட்டணியின் கர்வத்தை தமிழக மக்கள் அடக்குவார்கள்….

இண்டியா கூட்டணி கட்சிகளின் ஊழல் பட்டியல் மிகவும் நீண்டது. 2ஜி, நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் என ஊழல் பட்டியல் நீளும்.ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிப்பதே இண்டியா கூட்டணி கட்சிகளின் கொள்கை
.

தி.மு.க., தமிழகத்தின், தமிழ் பண்பாட்டின் எதிரி. சாதாரண எதிரி அல்ல. நமது கடந்த காலத்தையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கும் எதிரி என்று அவர் கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles