
பிறை மார்ச் 15-
கடந்த திங்கட்கிழமை நாடு தழுவிய அளவில் பள்ளிகள் திறக்கப்பட்ட வேலையில் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு காலடி எடுத்து வைத்துள்ளனர்.
இந்த தருணத்தில் பினாங்கு பிறை சட்டமன்ற தொகுதியில் உள்ள 50 மாணவர்களுக்கு தலா நூற்று ஐம்பது வெள்ளி வெகுமதியை பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
இனம் சமயம் பாராமல் அனைத்து இன மாணவர்களுக்கும் அவர் உதவி கரம் நீட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

