
பெட்டாலிங ஜெயா, மார்ச் 21-
கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் இன்று காலை பத்து மணிக்கு காலமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் மரணம் அடைந்த செய்தியை பிரி மலேசிய டூடே உறுதி படுத்தி உள்ளது.
கடந்த 2023 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோலகுபு பாரு தொகுதியில் போட்டியிட்ட இவர் 4,119 வாக்குகள் வித்தியாசத்தில் கெராக்கான் வேட்பாளர் தியோ கியான் ஹோங்கை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மூன்று தவணைகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி உள்ளார்.
இவரின் மரணத்தை தொடர்ந்து கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

