பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி இன் 50,000 வெள்ளி மானியம்!

பூச்சோங் 14 ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மாநாட்டு மண்டப கட்டட நிதிக்கு 50,000 வெள்ளியை வழங்குவதாக பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி இன் அறிவித்தார்.

நேற்று புத்ரா ஜெயா மேரியேட் தங்கும் விடுதியில் கட்டட நிதிக்கு நிதி திரட்டும் வகையில் மாபெரும் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில் தலைவர் டத்தோ புத்ரி சிவம் மற்றும் கட்டட குழு தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.

சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி இன் தமது சார்பில் 50,000 வெள்ளியை வழங்குவதாக அறிவித்தார்

எனது பூச்சோங் நாடாளுமன்ற தொகுதியில் இப்படி ஒரு மாநாட்டு மண்டபம் கட்டப்படுவது பெருமை அளிக்கிறது.

பூச்சோங் தொகுதி மக்களுக்கு என்னுடைய உதவி தொடர்ந்து இருக்கும் என்று அவர் சொன்னார்.

இதனிடையே பிரதமர் துறை அமைச்சு சார்பில் 50,000 வெள்ளி மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles