

புத்ரா ஜெயா மார்ச் 31-
பூச்சோங் நாடாளுமன்ற தொகுதி மக்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டில் பூச்சோங் நாடாளுமன்ற தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட போது அமோக வெற்றி பெற்றேன்.
பின்னர் 2013,2019 இல் நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் அமோக வெற்றி பெற்றேன்.
பூச்சோங் நாடாளுமன்ற தொகுதி மக்கள் எனக்கு வழங்கிய ஆதரவை ஒரு போதும் மறக்க மாட்டேன்.
இப்போது டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் பூச்சோங்கை மறக்க முடியாது என்று அவர் சொன்னார்.
அதனால்தான் பூச்சோங் 14 ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் நிர்வாகம் என்னை அழைத்ததும் கோவில் மண்டப கட்டட நிதி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று அவர் சொன்னார்.
பூச்சோங் 14 ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் எனக்கு மிகவும் பிடித்தமான கோவில்.
ஒவ்வொரு முறையும் இந்த கோவிலுக்கு வந்த பிறகு தான் வேட்புமனுவை தாக்கல் செய்தேன்.
அந்த வகையில் கோவில் தலைவர் டத்தோ புத்ரி சிவம், கட்டட குழு தலைவர் பாஸ்கரன் மற்றும் டத்தோ டி. மோகன் ஆகியோர் இந்த மாநாட்டு மண்டபத்தை கட்டி முடிக்க பெரும் முயற்சியை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.

