திட்டமிட்டப்படி பூங்சோங் 14 ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மாநாட்டு மண்டபம் கட்டி முடிக்கப்படும்! டத்தோ டி. மோகன் உற்சாகம்

புத்ரா ஜெயா மார்ச் 31-
பூச்சோங் 14 ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மாநாட்டு மண்டபத்தின்
கட்டுமானத்தை நிறைவு செய்வதற்கான முயற்சிகள் தொடரும் என்று மஇகா உதவித் தலைவரும் கட்டட நிதி திரட்டும் நிகழ்வின் இயக்குநருமான டத்தோ டி. மோகன் கூறினார்.

ஆலயத் தலைவர் டத்தோ டாக்டர் ஏபி சிவம் மற்றும் கட்டட குழு தலைவர் பாஸ்கரன் தலைமையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

70 விழுக்காடு கட்டுமானப் பணிகள் பூர்த்தி அடைந்திருக்கும் வேளையில் இன்னும் 30 விழுக்காடு கட்டுமானப் பணிகள் பூர்த்தி அடைய நிதி தேவைப்படுகிறது.

மூன்று மாடிகள் கொண்ட இந்த மண்டபத்தை திருமணம் உட்பட அனைத்து சுப காரியங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதே வேளையில் ஆலயத்தின் சமூக கடப்பாட்டு திட்டங்களுக்கும் இம் மண்டபம் பெரும் பயனாக இருக்கும்.

இதன் அடிபடையின்தான் இந்த நிதி திரட்டும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

இந்நிகழ்வின் இயக்குநராக எனது பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றியுள்ளேன் என நம்புகிறேன்.

இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பிரமுகர்கள், நன்கொடையாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோ டி. மோகன் கூறினார்.

டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ இ பின், செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் பா. தியாகராஜன், டத்தோ கணேசன், குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ், டான்ஸ்ரீ எம். கேவியஸ் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles