


கோலாலம்பூர் மார்ச் 31-
மைபிபிபி கட்சி மீண்டும் எழுச்சி பாதைக்கு திரும்பி விட்டது என்று விலாயா மாநில மைபிபிபி தலைவர் சத்திய சுதாகரன் தெரிவித்தார்.
நெருக்கடியில் இருந்து மைபிபிபி கட்சி முழுமையாக மீண்டு விட்டது.
இனிவரும் காலங்கள் பைபிபிபி கடட்சிக்கு ஒரு வசந்த காலமாக விளங்கும்.
நீதிமன்ற வழக்குகளிலும் நாம் வெற்றி பெற்று விட்டோம் . தலைமையகமும் இப்போது நமது கையில்.
ஒரு தன்மானம் நிறைந்த கட்சியாக மைபிபிபி உருவெடுத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் சரியான பாதையை நோக்கி மைபிபிபி பயணித்து கொண்டிருக்கிறது.
டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குருஸ் மறைவு மைபிபிபி கட்சிக்கு பெரும் வேதனையாகும்.
கட்சியை விட்டு போனவர்கள் மீண்டும் திரும்பி விட்டனர். அனுபவம் நிறைந்த மைபிபிபி தலைவர்கள் மீண்டும் மக்கள் சேவையில் களம் இறங்கி வேலை செய்து வருகிறார்கள்.
எனது தலைமையில் விலாயா மாநில மைபிபிபி தொகுதி தலைவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் என்று அவர் சொன்னார்
இன்று Dewan Komunity Sentul மண்டபத்தில் 2024 விலாயா மாநில மைபிபிபி ஆண்டு பேராளர் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

