2019 இல் பதிவு ரத்தான மைபிபிபி கட்சியை 2023 இல் மீட்டெடுத்தார் டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குருஸ்…..

கோலாலம்பூர் மார்ச் 31-
இனம் நிறம் பாராமல் பல்லின மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்றி கொண்டிருக்கும் மைபிபிபி கட்சி கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு சவால்களை எதிர்நோக்கியது.

இந்த சோதனைகள் மிகவும் கடுமையானவை.

ஒரு கட்டத்தில் அதாவது
2019 இல் மைபிபிபி கட்சியின் பதிவு ரத்தானது.

இருப்பினும் 2023 இல் மைபிபிபி கட்சியை காப்பாற்றிய பெருமை டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குருஸ் அவர்களை சாரும்.

டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குருஸ் சட்டப்பூர்வ தலைவர் என்று நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து மைபிபிபி கட்சி சோதனையில் இருந்து மீண்டது.

இன்று மைபிபிபி கட்சி விசுவாசமிக்க தொண்டர்களின் அரவணைப்போடு மீண்டும் வெற்றி நடை போடுகிறது என்று மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

இன்று Dewan Komunity Sentul மண்டபத்தில் விலாயா மாநில மைபிபிபி கட்சியின் பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

விலாயா மாநில மைபிபிபி தலைவர் சத்திய சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 800 க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் உதவித் தலைவர் டாக்டர் சுரேந்திரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, தேசிய பொருளாளர் டத்தோ டல்ஜிட் சிங் உட்பட பல முக்கிய தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles