120 குடும்பங்களை வீடு தேடிச் சென்று உதவி கரம் நீட்டினார் ரவாங் கவுன்சிலர் எலிஸ்!

புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு
ரவாங் வட்டாரத்தில் உள்ள மக்களின் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்றவாறு ஹரி ராயா அன்பளிப்புக் கூடைகள் வழங்கி உதவி செய்து வருகிறார் கவுன்சிலர் எலிஸ்

அந்த வகையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக கஷ்டப்படும் மக்களை வீடு தேடிச் சென்று அவர் உதவி புரிந்து வருவது அனைவரின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

இன்று ரவாங் கம்போங் மெலாயுவில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஹரி ராயா அன்பளிப்புக் கூடைகள் வழங்கி உதவி புரிந்தார்.

அன்பளிப்பு கூடைகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கலந்து கொண்டதோடு வந்திருந்த மக்களுக்கு ஹரி ராயா அன்பளிப்பு கூடைகளை எடுத்து வழங்கினார்.

இதனை தொடர்ந்து ரவாங் கம்போங் தஞ்சோங் மக்களுக்கு வீடு தேடி நேரில் சென்று அன்பளிப்புக் கூடைகள் வழங்கியுள்ளார்.

இவர் வழங்கும் இந்த அன்பளிப்பு கூடை உதவிகள் கஷ்டப்படும் பி40 மக்களுக்கு பெரிதும் உதவுகிறது.

தக்க நேரத்தில் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கவுன்சிலர் எலிஸூக்கு ரவாங் வட்டார மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles