
இம்மாதம் 27ஆம் தேதி ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய நபருக்கு துப்பாக்கி விநியோகம் செய்த சந்தேகத்தின் பேரில் ஒரு தம்பதியர் மற்றும் அவ்வாடவருக்கு ஓட்டுநராக செயல் பட்டதாக நம்பப்படும் உள்ளூர் நபர் உள்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாற்பது மற்றும் 42 வயதுடைய தம்பதியினர் நேற்றிரவு 7.30 மணியளவில் கோல சிலாங்கூரில் உள்ள ரமலான் சந்தையில் கைது செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
போலீஸ் விசாரணையின் போது அத்தம்பதியரின் ஹோண்டா ஜாஸ் காரில் கைத்துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
இஸ்ரேலியரிடம் ஒப்படைப்பதற்காக அண்டை நாட்டில் கைத்துப்பாக்கியை வாங்கியதை தம்பதியினர் ஒப்புக்கொண்டனர் என்று அவர் கூறினார் .
பகாங் மாநிலத்தின் கேமரன் ஹைலண்ட்ஸில் இஸ்ரேலியருக்கு ஓட்டுநராக செயல்பட்ட 38 வயது நபரையும் போலீசார் கைது செய்தனர்.