மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா நேற்று
Taman Maju,Jalan Semenyih, Kajang கில் உள்ள Pusat Jagaan Siti Nor Aini di பராமரிப்பு மையத்திற்குச் சென்றார்.
இந்த சித்தி நூர் அய்னி கேர் சென்டர் எதிர்கொள்ளும் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதித்தோடு எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
நேற்று இந்த பராமரிப்பு இல்லத்திற்கு உணவுகள் மற்றும் பொருட்களும் மைபிபிபி கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது
மைபிபிபி தேசிய தகவல் பிரிவு துணைத் தலைவரும் பாங்கி தொகுதி தலைவருமான திரு. குமாரவேலு இந்த விழாவை ஏற்பாடு செய்தார்.
சிலாங்கூர் மாநில மைபிபிபி உதவித் தலைவர் மற்றும் உலுவங்காட் தொகுதி மைபிபிபி தலைவருமான டாக்டர். சுரேந்திரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த மையத்தில் சுமார் 60 நோயாளிகள் மற்றும் முதியவர்கள் தங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.