பெனால்டி கோலினால் லிவர்பூல் தலை தப்பியது!

லண்டன் ஏப்ரல் 8-
பரபரப்பான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணக் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 2-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் கிளப்புடன் டிரா கண்டது.

சொந்த அரங்கில் விளையாடிய மென்செஸ்டர் யுனைடெட் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை.

ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் லிவர்பூல் கிளப்பின் முதல் கோலை டியாஸ் அடித்தார்.

பதிலுக்கு மென்செஸ்டர் யுனைடெட் கோலை 50 ஆவது நிமிடத்தில் புரூணோ அடித்தார்.

பின்னர் 67 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டரின் 2 ஆவது கோலை மைனோ போட்டார்.

ஆட்டம் முடியு வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே இருந்த வேளையில் இருந்த போது 84 ஆவது நிமிடத்தில் லிவரபூல் கிளப்பின் 2 ஆவது கோலை பெனால்டி கிக் வழி முகமட் சாலா போட்டார்.

இறுதியில் ஆட்டம் 2-2 என்ற சமநிலையில் முடிந்தது.
31 ஆட்டங்கள் முடிவில் அர்செனல் 71 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் லிவர்பூல் 71 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

மென்செஸ்டர் சிட்டி 70 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தில் உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles