
மா. பளவச்செல்வன்
ஷா ஆலம், ஏப்ரல் 7-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏப்ரல் 27 ஆம் தேதிக்கு முன் அறிவிக்கப்படுவார் என்று சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் செயலாளர் டாக்டர் முகமட் கைரூடின் தெரிவித்தார்.
ஜசெக கட்சி வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்ததும் பக்கத்தான் ஹராப்பான் தலைமைத்துவம் வேட்பாளரை அறிவிக்கும்.
கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸி ஹான் இம்முறை கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி தேர்தல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி இன், ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்லி யூசோப் அவருக்கு துணையாக இருப்பார்கள் என்று அவர் சொன்னார்.
கடந்த மூன்று தவணைகளாக கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்த லீ கீ ஹோங் காலமானதை தொடர்ந்து இப்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

