நகைகளுக்கு வரி விதிக்க கூடாது!நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

செ.வே. முத்தமிழ் மன்னன்

ஈப்போ, ஏப்ரல் 8-
நகை வாங்குவோர்களுக்கு ஆடம்பர வரி வசுலிக்கும் திட்ட அமலாக்கத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்று பேராக் மாநில நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டத்தோ அமாலுடின் கேட்டுக் கொண்டார்.

இப்போது நகை விலை அதிகரித்து வருவதால், கடைகளில் வாடிக்கையளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிவுக் கண்டு வருகிறது.

இதனால் வியாபாரமும் பாதிப்பை எதிர்நோக்கி வருகிறது. இந்த நிலையில் நகை வாங்குவோரிடம் வரி வசூலித்தால் வாடிக்கையாளர்கள் அதிருப்பத்தியை ஏற்படுத்தும் என்று அவர் சொன்னார்.

நகை வாங்குபவர்களில் பெரும் பகுதி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனை அவர்கள் வாங்கி சேமித்து வருகின்றனர்.

பிள்ளைகளின் கல்விக்கு, வீடுகள் வாங்குவதற்கு, குடும்ப தேவைக்கு அந்த நகைகள் உதவியாக உள்ளது.
ஆகவே நாட்டின் பிரதமரும், நிதி அமைச்சருமான் டத்தோஸ்ரீ அன்வார் இப்பராஹிடம் இந்த வரி வசூலிப்பு அமலாக்கத்தை கொண்டு வரக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles