
கோலாலம்பூர் ஏப்ரல் 8-
மார்ச் மாதம் 27 ஆம் தேதி 6 கைத் துப்பாக்கிகள், 200 தோட்டாக்களுடன் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய ஆடவர் இந்த வாரம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று மலேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின்ன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்வாடவருக்கு ஆயுதத்தை விற்றதாகக் கூறப்படும் உள்ளூர் தம்பதியினர் மீது இன்று கிள்ளான் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய ஆடவர் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையவில்லை.
மேலும், அவர் அண்டை நாடுகளிலிருந்து பெறப்பட்ட ஆறு துப்பாக்கிகளை வைத்திருந்ததற்கான உண்மையான நோக்கத்தைப் பெற கூடுதல் தகவல்களைத் தமது தரப்பு சேகரித்து வருவதையும் ரஸாருடின் குறிப்பிட்டார்.
பெர்னாமா

