காஜாங் மருத்துவமனையில் நோன்பு கஞ்சி வழங்கியது உலுலங்காட் மைபிபிபி!

செ.வே.முத்தமிழ் மன்னன்

காஜாங் ஏப்ரல் 8-
புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு உலுலங்காட் மைபிபிபி தொகுதி தலைவர் டாக்டர் சுரேந்திரன், உலுலங்காட் மைபிபிபி இளைஞர் அணி தலைவர் ஹரிஸ் ஷா மற்றும் பாங்கி மைபிபிபி தொகுதி தலைவர் குமார் ஆகியோர் ஏற்பாட்டில் காஜாங் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மற்றும் மைபிபிபி கட்சியின் பொறுப்பாளர்கள் காஜாங் மருத்துவமனைக்கு நேரடி வருகை புரிந்து நோன்பு கஞ்சி வழங்கியதோடு ஹரி ராயா வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

விலாயா மாநில மைபிபிபி தலைவர் சத்திய சுதாகரன், காப்பார் மைபிபிபி தொகுதி தலைவர் கதீர், சுபாங் மைபிபிபி தொகுதி தலைவர் நந்தா உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த உலுலங்காட் மைபிபிபி தொகுதி இளைஞர் அணி தலைவர் ஹரிஸ் ஷாவுக்கு சிலாங்கூர் மாநில மைபிபிபி உதவித் தலைவர் டாக்டர் சுரேந்திரன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

காஜாங் தீயணைப்பு படை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles