
புத்ரா ஜெயா ஏப்ரல் 10-
மலேசியாவை சிறந்த மற்றும் கண்ணியமான நிலைக்கு கொண்டு வர இனம், மதம் பாராமல் அனைத்து சமூகத்தின் வலிமையும் அர்ப்பணிப்பும் மலேசியாவுக்குத் தேவை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார்.
ஹரிராயா பெருநாளை முன்னிட்டு நேற்றிரவு தொலைக்காட்சியில் நேரடியாக உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்
எந்தக் காரணத்திற்காகவும் பெரும்பான்மையோ அல்லது சிறுபான்மையினரோ, எந்தக் குழுவையும் இனத்தையும் விலக்கவோ அல்லது பகைக்கவோ முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
-பெர்னாமா

