
மா.பவளச்செல்வன்
ரவாங், ஏப்ரல் 11-
தெலுங்கு உகாதி புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் ரவாங் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் உஹ
உகாதி பண்டிகை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ரவாங் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் தலைவர் டத்தோ சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவை மலேசிய தெலுங்கு சங்கம் ஏற்று நடத்தியது.
ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட், மலேசிய தெலுங்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ அச்சயக்குமார், சிலாங்கூர் மாநில பச்சை ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடுவின் அரசியல் செயலாளர் ஆனந்த், டத்தோஸ்ரீ பாலகிருஷ்ணன் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
தெலுங்கு சமுகத்தின் கலை கலாச்சாரங்களை பிரிதிபலிக்கும் வண்ணம் நடனங்கள் இடம்பெற்றன.
ஆலய நிர்வாகத்தின் சார்பில் முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுவையான உணவும் பரிமாறப்பட்டது.

