
செ.வே. முத்தமிழ் மன்னன்
சித்தியவான், ஏப்ரல் 11-
பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர்
பேராசிரியர் இராமசாமியின் மூத்த சகோதரி திருமதி முத்தம்மாள் பழனிசாமி நேற்று பேராக் மாநிலம் சிதியவானில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இவர் தனது இளமைப் பருவத்தில் டாக்டர் இராமசாமிக்கு கல்வி கற்பிப்பதற்கும் வழிகாட்டுவதற்கும் பெரும் துணையாக இருந்தார்.
சித்தியவான் முன்னாள் பள்ளி ஆசிரியையான அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர்.
இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
முத்தம்மாள் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஒன்று கரையிலிருந்து கரை, மற்றொன்று கிராமிய நாட்டுப்புறப்
பாடல்கள்.
ஷோர் டு ஷோர் என்ற ஆங்கிலப் பதிப்பு புத்தகம் 2003 ஆம் ஆண்டு முன்னாள் இந்திய தூதர் வீணா சிக்ரி அவர்களால் வெளியிடப்பட்டது.
இந்நூலின் தமிழாக்கம் தமிழ் நடிகர் சிவகுமார் அவர்களால் கோவை ரெசிடென்சி ஹோட்டலில் 2005 இல் வெளியிடப்பட்டது.
கிராமிய நாட்டுப்புறப் பாடல்கள் என்ற தமிழ் நூலை, முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மகளும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வெளியிட்டார்.
சியாம் மரண ரயில்வே
குறித்து இவர் விரிவான ஆராய்ச்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு மேல் அவரது இல்லத்தில் நடைபெறும் இறுதிச் சடங்கிற்கு பின்னர் அன்னாரின் நல்லுடல் சித்தியவான் மின்சுடலையில் தகனம் செய்யப்படுகிறது.

