
இஸ்தானா நெகாராவில் நேற்று நடைபெற்ற நோன்புப் பெருநாள் உபசரிப்பில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பேரரசியார் ராஜா சாரித் சோபியா கலந்து சிறப்பித்தனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா, துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, அரசாங்க தலைமை செயலாளர், பல நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் உட்பட 400 க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


