
பொருளாதார வளர்ச்சியில், குறிப்பாக அதிக மதிப்புள்ள முதலீடுகளை பெற்றதன் வழி, நாட்டின் திறனை மலேசியர்கள் உணர்ந்து கொள்ள முடியும். அரசாங்கத்தின் திறனை உணரும் ஆற்றல் மலேசியர்களுக்கு உண்டு என்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை கொண்டுள்ளார்.
“உலகளாவிய நிறுவனங்களின் மதிப்புமிக்க முதலீடுகள், அதிகமான மலேசியர்களுக்கு அதிக ஊதியம் தரும் வேலைகளை உருவாக்குகிறது.
“நமது பொருளாதாரம் மற்றும் இந்த தேசத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கு, மேம்பாட்டுக்கும் பங்களிக்கும், மலேசியர்களின் ஆற்றலிலும் திறனிலும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று பிரதமர் அன்வார் தனது பேஸ்புக் கணக்கில் தெரிவித்துள்ளார்.

