வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது: அதிபர் ஜிம் ஜாங் உன் அறிவிப்பால் பதற்றம்

முன்னெப்போதும் இல்லாத வகையில் போருக்கு தயாராகி வருவதாக வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியா தென்கொரியா நாடுகளின் நீண்டநாள் மோதலால் கொரிய தீபகற்பத்தில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

தென்கொரியாவுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் இணைந்து கூட்டு ராணுவ போர் பயிற்சிகளை நடத்துவது, தென்கொரியாவில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள், அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் போன்ற சக்தி வாய்ந்த ராணுவ தளவாடங்கள் நிறுத்தி வைப்பு போன்ற நடவடிக்கைகள் வடகொரியாவை எரிச்சலடைய வைத்துள்ளது.

இதனால் வடகொரியா குறுகிய ஏவுகணை சோதனை, கண்டம் விட்டு கண்டம் தாவும் நீண்டதூர ஏவுகணை சோதனை, நீருக்கடியில் கதிரியக்க சுனாமிகளை உருவாக்கி அணு ஆயுத இலக்குகளை அழிக்கும் புதிய டிரோன் சோதனைகளை செய்து வருகிறது.
இந்நிலையில் வடகொரியாவின் அரசியல் சூழல்கள் பதட்டமாக உள்ளதாகவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் போருக்கு தயாராகி வருவதாகவும் வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles