
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில் தேர்தல் பணிகளிலிருந்து மௌனமாய் வெளியேறுகிறோம் என்று பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் அறிவித்துள்ளார்
வேட்பாளர் பாமக அலுவலகத்துக்கு வரவில்லை. வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பாமகவை அழைக்கவில்லை. 6 தொகுதியில் இரண்டு தொகுதிக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கலுக்கு பாமகவை அழைக்கவில்லை. தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிற்கு பாமகவை அழைக்கவில்லை. எந்த ஒரு பிரச்சாரத்திற்கும் இதுவரை அழைக்கவில்லை.
தேர்தல் வாக்குறுதி வெளியிட்டு நிகழ்ச்சிக்கு பாமகவுக்கு அழைப்பில்லை. கூட்டணி தர்மம் முக்கியம் தான் அதைவிட சுயமரியாதை முக்கியம். கோவை பாஜக தேர்தல் பொறுப்பாளர் கூட்டணி தலைவர்கள் யாரையும் மதிப்பதில்லை,ஏறக்குறைய அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுமே மிகுந்த மனவருத்தத்தில் தான் உள்ளனர். கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு தேர்தல் பணிகளில் இருந்து மௌனமாய் வெளியேறுகிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

