
சித்திரை புத்தாண்டையொட்டி சிலாங்கூர் வேஃப் எனப்படும் சிலாங்கூர் மாநில சமூகநல மற்றும் தொண்டூழிய மேமபாட்டு இயக்கம் தனது இயக்க உறுப்பினர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 150 பெண்களுக்கு சேலைகள் மற்றும் இனிப்பு பொருட்களை வழங்கியது.
இயக்க உறுப்பினர்களின் தாய்மார்கள் மற்றும் மனைவிமார்களைச் சிறப்பிக்கும் பொருட்டு அவர்களுக்கு சேலைகள், இனிப்பு பொருட்கள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டதாக இவ்வியக்கத்தின் ஆலோசகர் ராஜன் முனுசாமி தெரிவித்தார்.
விஷ்ணு தேவ்வை தலைவராகக் கொண்ட இவ்வியக்கம் இதுபோன்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருவதாகவும் அறியப்படுகிறது.
வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் செமினி வாழ் மகளிர் அமானா இக்தியார் , தெக்குன் போன்றவற்றோடு மாநில அரசாங்கத்தின் ஐசிட், சித்தம் உள்ளிட்ட அனைத்து உதவி திட்ட வாய்ப்புகளையும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
வர்த்தகர்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் வழங்கி வரும் பல்வேறு கடனுதவி திட்டங்களுக்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு ராஜன் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

