
செ.வே. முத்தமிழ் மன்னன்
சுங்கை பூலோ ஏப்ரல் 15-
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நேற்று சுங்கை பூலோ தேவி ராஜா மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
கோவில் தலைவர் டத்தோ மூர்த்தி – டத்தின் புஷ்பலதா தம்பதியர் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூசையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்பு வருகை புரிந்த டத்தோ ஏ.கே. தேவ்ராஜ் மற்றும் டத்தோஸ்ரீ திருமுருகன் ஆகியோருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.
சிறப்பு பூசைக்கு பின்னர் பக்தர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது.

