
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணக் கால்பந்து போட்டியில் சொந்த அரங்கில் விளையாடிய லிவர்பூல் கிளப் 0-1 என்ற கோல் கணக்கில் கிரிஸ்டல் பேலஸிடம் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி கண்டது.
ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டல் பேலஸ் கிளப்பின் கோலை இஸி அடித்து கலக்கினார்.
இதுவரை 32 ஆட்டங்களை முடித்துள்ள லிவர்பூல் 71 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற லிவர்பூல் கனவு பலிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதனிடையே நேற்று நள்ளிரவு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சொந்த அரங்கில் விளையாடிய அர்செனல் 0-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்டன் விலாவிடம் தோல்வி கண்டது.
அர்செனல் 71 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது.
மென்செஸ்டர் சிட்டி 73 புள்ளியுடன் முதலிடத்தில் இருக்கிறது.

