
கோலாலம்பூர், ஏப் 15- மத்திய கிழக்கில் ஆக்கிரமிப்பு மேலும் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்கும் பகைமைப் போக்கை நிறுத்துவதற்கும் ஏதுவாக அனைத்துத் தரப்பினரும் உலக சமூகத்தின் நலனுக்காகச் செயல்படுவது நல்லது என்று மலேசியா உறுதியாக நம்புகிறது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் சம்பந்தப்பட்ட சமீபத்திய மோதலைத் தொடர்ந்து நிரந்தரத் தீர்வை உறுதி செய்வதற்கு அப்பிராந்தியத்தில் நிகழ்ந்து வரும் வன்செயல்கள் முடிவுக்கு வரப்பட வேண்டும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
மோதலை உடனடியாக நிறுத்தாவிட்டால் தீர்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு பாதையும் நிலையானதாக இருக்காது.நிலைமை எதுவாயினும், இந்த பயங்கரமான சூழலில் தொடர்ந்து பாதிக்கப்படும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மலேசியா துணை நிற்கும் என்று அவர் சொன்னார்.
bernama

