கே.எல்.ஐ.ஏ. துப்பாக்கிச் சூடு – சந்தேகப் பேர்வழியின் புகைப்படம் எல்லைப் பகுதிகளில் விநியோகம்!

கோலாலம்பூர், ஏப் 15 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின்
முதலாவது முனையத்தில் (கே.எல்.ஐ.ஏ.) நேற்று நிகழ்ந்த துப்பாக்கிச்
சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகப் பேர்வழியின் புகைப்படம்
நாட்டின் வட பகுதியில் உள்ள நுழைவாயில்கள் மற்றும் அந்நிய நாட்டு
அதிகாரிகளிடம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

மெய்க்காப்பாளர் ஒருவர் படுகாயமடைவதற்குக் காரணமான
அச்சம்பவத்தில் தொடர்புடைய அந்த சந்தேக நபர் அடையாளம்
காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தேசிய
போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் கூறினார்.

bernama

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles